2021-07-09

கபிஷ்ணா பிறந்தநாளில் கல்வி செயற்பாட்டிற்கு ஊக்கமளிப்பு!

யாழ்ப்பாணம் வலிகிழக்கின் ஆவரங்கால் கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவருக்கு இன்றையதினம் வெள்ளிகிழமை(09.07.2021) துவிச்சக்கர வழங்கப்பட்டது.
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துள்ள முன்னைநாள் போராளி ஒருவரின் மகள் க.பொ.த. (O/L)சாதாரணத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று க.பொ.த (A/L)உயர்தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவி போக்குவரத்து நெருக்கடியால் கல்வியை தொடர்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் மகளின் தேவையை நிவர்த்தி செய்து உதவும் நிலையில் தமது பொருளாதார நிலையும் இல்லையென பெற்றோர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மாணவிக்கான துவிச்சக்கரவண்டியை உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்களால் வழங்கப்பட்டது,இந் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு.ரூபன் அவர்களும் பங்கு கொண்டிருந்தார்.
துவிச்சக்கர வண்டிக்கான நிதி பங்களிப்பினை சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு. திருமதி. ராஜன் நந்தினி தம்பதியினர் “கபிஷ்னா” என்ற தமது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த உதவியை நல்கியிருந்தனர்.
 
புலம்பெயர்ந்தாலும் நினைவு மாறாத தாயக நினைவுகளுடன் வாழ்ந்துவரும் எம் புலம் பெயர் உறவுகளின் அளவிட முடியாத பணியே இவ்வாறான அறபணிகளை முன்னெடுக்க முடிகிறது. எமக்கு(UF) ஊடாக தோள்கொடுத்து உதவிவரும் உள்ளங்களிற்கும் நன்கொடையாளர்களிற்கும் UFஇன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதுடன், பிறந்தநாள் காணும் திரு.திருமதி. ராஜன் நந்தினி தம்பதியினரின் புதல்வி கபிஷ்னா அவர்களிற்கும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.