2021-07-11

உமா மகேஸ்வரன் பவுண்டேசன் சுதந்திரமான தன்னார்வ அமைப்பு!

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியெங்கும் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் செயற்பட்டுவரும் எமது அமைப்பு ,எந்தவொரு அரசியல் கட்சியுடனோ ,அமைப்புடனோ ,அதிகார பூர்வ/உத்தியோக பூர்வ தொடர்புகளையோ, உறவுகளையோ கொண்டிருக்காமல், சுதந்திரமான இன, மத, மொழி, கட்சி, வர்க்க வேறுபாடுகள் இல்லாத தொண்டர் அமைப்பாக செயல்ப்பட்டு வருகிறது என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம்.
 
எமது யாப்பு விதிமுறைகளிற்கு அமைவாகவே தொடர்ந்து செயலாற்றி வருகின்றோம்.
 
எமது நன்கொடையாளர்களும், தோழ் கொடுப்பவர்களும்,UF இன் செயற்பாட்டை, நிலைப்பாட்டை ஆதரித்தே தொடர்ந்தும் தமது உதவிகளை வழங்கி வருகின்றனர்.
எமக்கு வழங்கப்படும் உதவிகள் கட்சி வேறுபாடுகள் எல்லாவற்றையும் கடந்தே பாதிக்கப்பட்ட மக்கள்,மாணவர்களை சென்றடைந்து வருகின்றன.
எமது மேற்படி நிலைப்பாட்டில் என்றும் எந்த மாற்றமும் ஏற்படாது.
 
உதவித்தேவையுடைய மக்களின் வாழ்க்கை மேம்பாடு என்பதை தவிர ,அரசியல் பொருளாதாரம் அல்லது வேறெந்த நோக்கமும் எமக்கு கிடையாது.
நாட்டின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு, முழுமையான சுதந்திரத்திரத்துடன், வேறு எவரது கட்டுப்பாடுகளும் அற்ற முழுமையான தொண்டர் அமைப்பாக செயற்படுவதே உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் நோக்கமும் ,சிந்தனையும், செயல்பாடுகளுமாகும்.