2021-07-14

திருமலை பாலையூற்றில் கொவிட்-19 உலர் உணவு வினியோகம்!

கொவிட்-19 தொற்று காரணமாக வேலையிழந்து அல்லல்படும் மக்களிற்கான உலர் உணவு வினியோகத்தை வடகிழக்கு உள்ளடங்கலாக உமாமகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் புதன்கிழமை14.07.2021 திருகோணாமலை பாலையூற்று கிராமத்தில் வசித்துவரும் மக்களுக்கான முதற்கட்ட உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
 
UF இன் திருமலை மாவட்ட இணைப்பாளர் திருமதி.வசந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இன மத வேறுபாடுகளை கடந்து தமிழ், முஸ்லீம் மக்கள் தமக்கான உணவு பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
 
இதற்கான நிதியுதவியை தற்போது பிரித்தானியாவில் வசித்து வருபவரும் முன்னைநாள் போராளியுமான யாழ் ஏழாலையை சேர்ந்த அன்பர் ஒருவர் வழங்கியிருந்தார். (அனுசரணையாளரின் வேண்டுதலிற்கு அமைய அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது)
 
எமது மக்களின் இன்னல் போக்கிடும் உன்னத பணிக்கு ஊக்கமளித்து வரும் எமது புலம் பெயர் உறவுகளுக்கு எம் மக்கள் சார்பான நன்றிகள், அவ்வகையில் இன்றைய நிகழ்வுக்கு நிதி அனுசரனை வளங்கிய அன்பருக்கும் அவர் தம் குடும்பத்துக்கும் எமது(UF) வாழ்த்துக்களும் நன்றிகளும்.