2021-07-15

ஆச்சிபுரம் குடும்பஸ்தருக்கான சிறு தொழில் ஊக்குவிப்பு !

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் வசித்துவரும் குடும்பஸ்தர் (முன்னை நாள் போராளி) ஒருவருக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக சிறுதொழில் தொடங்குவதற்கான காசோலை இன்றைய தினம் வியாழக்கிழமை(15.07.2021) வழங்கப்பட்டது.
 
மேற்படி கிராமத்தில் வசித்துவரும் திரு.முருகைய்யா(இராவணன்) என்ற குடும்பஸ்தர் தனது குடும்ப நிலையை விளக்கி எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவும் நிதி அனுசரணையாளரின் விருப்பத்திற்கு இணங்க பயனாளியின் சுய தொழிலுக்கான ஊக்குவிப்பு தொகை கொடுக்கப்பட்டது.
வவுனியா தெற்கிலுப்பைகுளம் வீதியில் அமைந்துள்ள “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்” தலைமையகத்தில் வைத்து மேற்படி சிறு தொழிலுக்கான ஊக்கத்தொகையான 50,000 ரூபாவுக்கான காசோலையை UF இன் நிதி பொறுப்பாளர் திரு. ரவீந்திரன் (ரவி) அவர்களிடம் இருந்து பெற்று கொண்டார். இவ் நிகழ்வில் UF இன் செயலாளர் திருமதி. ஹென்றி பெரேரா ஐஸ்மின் அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
 
இதற்கான உதவியை பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் திரு.திருமதி பரன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்,
தன்னோடு போராட்ட பாதையில் இணைந்து பயணித்த முருகைய்யா அல்லது இராவணன் எனும் நண்பனின் கஷ்டநிலை கண்டு வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக அவர் சிறு வியாபாரத் தொழில் செய்து பிழைப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாவினை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக கொடுத்து உதவினார்.
இவ் சிறு தொழில் ஊக்குவிப்பு உதவியை எமது நிறுவனமான UF ஊடாக வழங்கியிருந்த திரு.திருமதி பரன் குடும்பத்தினருக்கும் UFஇன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.