யாழ்பல்கலைகழக மாணவிக்கான உமாபுலமை பரிசில்!
வவுனியா மாவட்டத்தின் மற்றுமொரு மாணவிக்கான உமா புலமை பரிசில் கல்வி ஊக்குவிப்பு இன்றைய தினம் சனிக்கிழமை (17.07.202) மேலும் ஓர் மாணவிக்கு UF இன் பொருளாளர் திரு. ரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது.
வவுனியா பெரியபுளியங்குளம் மாணவிக்கே கல்விக்கான உதவி கொடுக்கப்பட்டது, உமாமகேஸ்வரன் பவுண்டேசன் “உமாபுலமை பரிசில்” திட்டத்தின் கீழ் புலம் பெயர் வாழ் எமது உறவுகளின் அனுசரணையில் கல்வி பணிக்கு ஊக்கமளித்து வருகின்றது.
இலங்கையின் பல்வேறு பல்கலைகழகங்களில் தமது பட்ட படிப்புகளை மேற்கொண்டுவரும் மாணவ, மாணவியரின் குடும்ப நிலை, கல்வி நிலையை கவனத்தில் கொண்டு தொடர்ச்சியாக அவர்களிற்கான உதவிகளை எமது நிறுவனம் நல்கி வருகின்றது.
எமது சமூகம் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் உயர்ச்சியை பெறுவதன் ஊடாகவே பாரியமாற்றத்தை காண முடியும் என்பதுவே எமது நிறுவனத்தினதும் அனுசரணையாளர்களின் கூற்று, அதற்கு அமைவாகவே கற்றல் நடவடிக்கைக்கு முதன்மையாக ஊக்கம் கொடுத்து வருகிறோம்.
எமது எண்ணங்களும், நோக்கங்களும் மெய்ப்பட வேண்டும் அதற்கு எமது மாணவ, மாணவியரும் பூரண ஒத்துளைப்பு நல்கி வருகின்றனர். “கற்றதால் பலனடைந்தோர் பலர்” ஆகவே எம்மால் ஊக்கமளிப்படும் மாணவர்களும் சிறந்த பெயர், புகழ்,பெறுபேறுகள், கீர்த்தி பெற்று சிறந்த சமூகமாற்றத்தை தருவார்கள் என்று கருதுகின்றோம்.
இதுவரை எமது நிறுவனம் ஊடாக 20 க்கு மேற்பட்டவர்கள் “உமாபுலமை பரிசில்” பெற்று பல்கலை படிப்பினை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வரிசையில் இன்றைய இவ்மாணவியும் உமா புலமை பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளார்.
எமது திட்டங்களிற்கு அனுசரணையாளர்களே பிரதானிகள் எல்லா புகளும் பெயரும் அவர்களையே சாரும். எமது திட்டங்களிற்கு மனசு கோணாமல் தொடர்ந்து ஊக்கமளித்துவரும் புலம் பெயர் வாழ் அத்தனை கொடையாளர்களுக்கும் எமது நன்றிகள்.
அவ்வகையில் இன்றைய மாணவிக்கான உமா புலமை பரிசிலுக்கு அனுசரணை வழங்கியுள்ள கனடாவை சேர்ந்த திரு. சுப்பிரமணியம் ரவீந்திரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாணவியின் சார்பாகவும், குடும்பத்தார், மாணவ, மாணவியர் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துக்களையும் எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தெரிவித்து கொள்கின்றது.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.