வவுனியா ஊர்மிளா கோட்டத்தில் கொவிட்-19 நிவாரணம்!
கொரோனா தாக்கத்தின் அசாதாரண சூழ்நிலையால் வருமானம் அற்று மிகவும் கஸ்ட்ட நிலையில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட 20 குடும்பங்களிற்கான கொவிட்-19 நிவாரணம் வவுனியா ஊர்மிளா கோட்டத்தில் வசிக்கும் மக்களிற்கான உலர் உணவுபொருட்கள் இன்றையதினம் திங்கள்கிழமை(26.07.2021) உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் கொடுக்கப்பட்டது.
மேற்படி கிராம மக்கள் UFவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவர்களிற்கான உலர் உணவு பொருட்கள் உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் செயலாளர் திருமதி. ஜஸ்மின் ஹென்றி பெரேரா அவர்களால் வழங்கப்பட்டது.
சமூகத்தின் விடியலிற்காக கிளர்ந்தெழுந்த முதல்பெண்போராளி "ஊர்மிளா" நினைவாக இவ்வுதவிகள் அவரது பெயரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு வழங்கவேண்டும் என்ற நன்கொடையாளரினதும் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்து உதவப்பட்டது.
கொவிட்-19 தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து வடகிழக்கு தாயகம் எங்கும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள், வறுமையில் நிலையில் வாடும் எம் மக்களை அடையாளம் கண்டு எமது நிறுவனம் வழங்கிவருகின்றது.
எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான மனிதாபிமான பணிகள் உட்பட இன்னோரென்ன பணிகளிற்கு எமது புலம்பெயர் உறவுகளே நேசக்கரம் நீட்டி வருகின்றனர். அவ் வகையில் இன்றையதினம் வழங்கப்பட்டட நிவாரண உதவிகளிற்கான நிதி அனுசரணையை கடல்கடந்து, தேசம் கடந்து சுவிஸ் நாட்டில் வசித்தாலும் தன் நினைவுகளையும், உணர்வுகளையும் மக்கள் உதவி மூலம் வெளிப்படுத்திவரும் திரு.இராஜேந்திரம் குடும்பத்தினருக்கு உதவிபெற்ற எம்மக்கள் சார்பாக உமாமகேஸ்வரன் பவுண்டேசன் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றது.