2021-07-31

திருமலை மணியாவளியில் கொவிட் - 19 நிவாரணம் !

வடக்கு கிழக்கு தாயகத்தில் இன, மத, மொழி, வர்க்க முரன்பாடுகளை கடந்து கொவிட்-19 தொற்று காரணமாக வருமானம் இழந்து பெரும் பொருளாதார கஸ்டத்தில் வாழும் மக்களுக்காக தொடர்ச்சியாக கொவிட்-19 நிவாரண உதவிகளை உமா மகேஸ்வரன் பவுண்டேசன் வழங்கி வருகின்றது.
 
இன்றைய தினம் சனிக்கிழமை (31.07.2021) திருகோணாமலை மாவட்டத்தின் மணியாவளி கிராம மக்களிற்கான உலர் உணவு பொதிகள் UF இன் திருகோணாமலை மாவட்ட இணைப்பாளர் திருமதி. ச.வசந்தி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இனமத முரன்பாடுகளை கடந்து தமிழ், முஸ்லீம் மக்கள் தமக்கான உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொண்ட தன் மூலம் இன நல்லுறவையும் இங்கே காண முடிந்தது.
 
கடந்த 14ம் திகதி திருமலை மாவட்டத்தின் “பாலையூற்று” கிராமத்தில் 37,900 ரூபா பெறுமதியான பொதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் 83, 100 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்றைய நாள் “மணியாவளி” கிராம மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
 
இதற்கான நிதி அனுசரணையை சமூகத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்ட யாழ் ஏழாலையை சேர்ந்தவரும் பிரித்தானியாவை வதிவிடமாகவும் முன்னைநாள் போராளி ஒருவரும், அண்மையில் விபத்தில் மரணமடைந்த திரு.முருகேசு சத்தியநாதன் ( ராசா) அல்லது உரும்பிராய் ராசா என்று அறியப்பட்ட சமூக பற்றாளனின் 45ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு கனடாவில் வாழும் நண்பர்கள் சிலர் இணைந்து நிதியுதவி நல்கியிருந்தனர்.
 
உழைப்பின் சிறு பகுதியை தமது உறவுகளை எண்ணி உதவிடும் எமது புலம்பெயர் உள்ளங்களை என்றென்றும் போற்றிட வேண்டும், அவ்வரிசையில் இன்றைய நிகழ்வுக்கு நிதி அனுசரனை வழங்கியிருந்த பிரித்தானிய வாழ் அன்பருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும், கனடாவில் இருந்து தமது நண்பர் அமரர். திரு.சத்தியநாதனின் 45ம் நினைவு நாளை முன்னிட்டு நிதி அனுசரணை வழங்கிய அன்பர்கள், நண்பர்களுக்கும் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றது.