2021-08-10

மாணவியருக்கான உமாமகேஸ்வரன் புலமைரிசில்!

கல்வி நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் உமாமகேஸ்வரன் “புலமை பரிசில்” ஊக்கத்தொகை இன்றைய தினம் திங்கள்கிழமை (10.08.2021)வழங்கப்பட்டது.
 
திரு.சு.ரவீந்திரன் (கனடா) அனுசரனையில் செல்வி வில்வராஜ் விநோதினி, திரு.எஸ்.எஸ். ராஜா (பிரித்தானியா) அவர்களது அனுசரணையில் செல்வி சதாசிவம் பிரியங்கா, திரு. திருமதி தேவருராசா ராஜினி ( ஜேர்மனி) ஆகியோரின் அனுசரணையில் செல்வி நாகராசா சித்திரா ஆகியோரிற்கான வைகாசி மாதத்திற்கான உமாமகேஸ்வரன் புலமைபரிசில் ஊக்கத்தொகை இன்றைய தினம் UF இன் பொருளாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் மாணவியருக்கான புலமை பரிசில் ஊக்கத் தொகையை வழங்கினார்.
மேலும் நான்கு மாணவியர் உமாமகேஸ்வரன் புலமை பரிசிலுக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுசரனை வழங்கி கல்வியை ஊக்குவிக்க விரும்பும் நன்கொடையாளர்கள், அனுசரணையாளர்கள் உமா மகேஸ்வரன் பவுண்டேசனுடன் தொடர்பு கொள்ள முடியும்.
 
செல்வத்தில் சிறந்த செல்வமான “கல்வி” செல்வத்தை ஊட்டி எமது எதிர்கால சமுதாயத்தை வளமான சமூகமாக உருவாக்கிடுவோம், இந்த உயரிய பணிக்கு ஊக்கமளித்துவரும் அனைத்து அனுசரனையாளர்களுக்கும் UF இன் நன்றியும் வாழ்த்துக்களும்.