கிழக்கு பல்கலைகழக மாணவ மாணவியருக்கான உமா புலமைபரிசில் ஊக்கத்தொகை!
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13.08.2021) கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் மூதூர், கதிரவெளி, ஈச்சிலம்பற்று, சம்பூர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாணவ மாணவியர் ஒன்பது பேருக்கான உமா புலமைபரிசில் மாதாந்த ஊக்குவிப்பு தொகை UF இனால் வழங்கப்பட்டது.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து அவர்களை அறிவால் உயர்த்தி, அறிவாற்றல் மிக்க சமூகமாக எமது எதிர்கால சமூகம் மிளிர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவ் மாணவ, மாணவியருக்கான நிதி அனுசரணையை உமா புலமைபரிசில் திட்டத்திற்கு அமைய எமது நிறவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக சுவிஸ் நாட்டில் வசித்துவரும் வேந்தன் (ஸ்ராலின்) என்று அழைக்கப்படும் திரு. மகாவேந்தன் அவர்கள் வழங்கி வருகின்றார்.
கல்வி ஒன்றே சிறந்த மூலதனம் என்ற கோட்பாட்டுடன் தொடர்ச்சியாக உதவி வரும் திரு.வேந்தன் மற்றும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எம் மாணவ, மாணவியர் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் UF தெரிவித்து கொள்கின்றது.