2021-08-06

போலி செய்திகள் குறித்து விழிப்பாக இருப்போம்!

உமா மகேஸ்வரன் பவுண்டேசன் எனும் பெயரில் தொண்டர் நிறுவனமாக கடந்த மூன்று ஆண்டுகளிற்கு மேலாக எமது (UF)நிறுவனம் பல்வேறு மக்கள் நல பணிகள், மாணவ, மாணவியருக்கான கல்வி ஊக்குவிப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
 
எமது மக்கள் நலதிட்டங்களை ஜீரணித்து கொள்ள முடியாத விசமிகள் மலையக மாணவருக்கு வினாதாள்களை வினியோகித்தது என்று “உமா” பவுண்டேசன் எனும் பெயரில் எமது அடையாளங்களோ, இலட்சினைகளோ இல்லாத போலி லேபிளுடன் பொதியொன்றை போட்டு செய்தி பரப்பி வருகின்றனர்.
இவ்வாறன பொருட்கள் எவையும் இதுவரை “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்” என்ற எமது நிறுவனம் ஊடாக வழங்கப்படவில்லை.
 
நாம் வழங்காத அல்லது செய்யாத பணிக்கான பெயரும் எமக்கு வேண்டாம்,புகளும் வேண்டாம். செய்ததையே செல்வோம், நல்லதை செய்வோம் நல்லதையே விதைப்போம்.
 
எம்மால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் எமது முகபக்கம் அல்லது எமது உத்தியோகபூர்வ இணையத்தில் www.umafdn.com வெளிவரும், விசமிகளின் போலி பரப்புரைகளை நம்ப வேண்டாம்.
 
எமது வளர்ச்சியையும் மக்கள் செல்வாக்கையும் பொறுத்து கொள்ள முடியாத தீய சக்திகள் குறித்து எமது ஆதரவாளர்கள், அனுசரணையாளர்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
 
எந்த சதி நடவடிக்கை, குழிபறிப்புகள், விசம பிரச்சாரங்கள் எமக்கு எதிராக எவர் முன்னெடுத்தாலும் அனைத்தையும் தகர்த்து எமது மக்களுக்கான மனித நேய பயணம் தொடரும்…..
-உமா மகேஸ்வரன் பவுண்டேசன்.