2021-09-01

யாழ் அச்செழுவில் கொவிட் - 19 நிவாரணம்!

 
கொவிட்-19 நோய் பரவலினால் ஒட்டுமொத்த இலங்கை தேசமே முடங்கிய நிலையில் தொழில் வாய்ப்புகள் இன்றி பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளோரில் அவசிய தேவையுடையோர் எம்மிடம் விடுத்துவரும் வேண்டுதலிற்கு அமைய எமது நிறுவனம்(UF) அம்மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக (கொவிட் - 19 தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து) வடகிழக்கு தாயக பகுதியெங்கும் கொவிட் நிவாரண பணிகளை எமது நிறுவனமான UF வழங்கி வருகின்றது.
 
அந்த வகையில் இன்றையதினம் புதன்கிழமை (01.09.2021) யாழ் அச்செழுகிராமத்தில் வசிக்கும் 30 குடும்பங்களிற்கான உலர் உணவு பொதிகள் உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் கொடுக்கப்பட்டது. இவ்நிகழ்வில் அத்தியார் இந்து பாடசாலை உப அதிபர் திருமதி.விஜயகுமாரி மற்றும் சமூக ஆர்வலர்கள் என்போர் கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கிய போதும், நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள முடக்க நிலையால் எமது(UF)யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
 
வீரியமடைந்துள்ள கொரோனா பரவலினால் முடக்க நிலையில் நாடே முடங்கியுள்ள நிலையில் தொழில் வாய்புக்கு செல்ல முடியாமல் இன்னல்படும் குடும்பங்களுக்கே இவ் கொவிட்- 19 நிவாரணம் வழங்கப்பட்டது.
 
இதற்கான அனுசரணையை ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் திரு. இராசசிங்கம் உதயகுமார் (அப்பன்) அவர்கள் தனது 60வது ஜனன தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தார், தொடர்ச்சியாக சமூக நல திட்டங்களிற்காக எம்முடன் இணைந்து கைகொடுத்து வரும் அவரது பணிகளுக்கும் உதவிகளுக்கும் UF நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றது.
 
அகவை 60இல் கால்பதிக்கும் இராசசிங்கம் உதயகுமார் நோய் நொடியற்ற மகிழ்வுடன் கூடிய நீடித்த நெடிய வாழ்வினை பெற்று இனிதே வாழ்ந்திட வேண்டும் எனவும் UF வாழ்த்துகின்றது.