2021-09-09

கொவிட் முடக்க நிலையிலும் தொடரும் பல்கலை மாணவருக்கான உமாபுலமை பரிசில் !

கொவிட்-19 நோய் பரவல் எம் தேசத்தை பொறுத்தவரையில் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ள நிலையில் முடக்கநிலை பிரகடனப்படுத்துள்ளமையால் கல்வி செயற்பாடுகள “மெய்நிகர்” வழியில் தொடர்கின்றது.
 
நேரடி வகுப்புகள் போன்று அல்லாமல் “மெய்நிகர்”வழியில் கல்வியை தொடர்வதில் மாணவ, மாணவியர் பெரும் அசெளகரியங்களை (சில பிரதேசங்களில் இணைய வலையமைப்புகள் சீராக இயங்காத நிலையில்)எதிர்நோக்கிய நிலையிலும் தமது கல்வி செயற்பாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.
 
இவ்நிலையிலும் எந்தவொரு இடர்பாடுகளும் தடங்கல்களும் இல்லாமல் மாணவ, மாணவியருக்கான “உமாபுலமை பரிசில்” தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வருகின்றது. அந்த வகையில் கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வி பயின்று வரும் திருமலை, மூதூர், மட்டக்களப்பு பகுதி மாணவ, மாணவியருக்கான செப்டம்பர் மாதத்திற்கான உமாபுலமை பரிசில் ஊக்கதொகை கடந்த வியாழக்கிழமை (09.09.2021)வழங்கப்பட்டது.
 
கல்வியின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் எதிர்கால சமுதாய முன்னேற்றத்தையும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்பையும் எதிர்கொண்டு இவ் அனுசரணையை உள்ளம் தளராமல் உதவி வரும் சுவிஸ் வர்த்தகர் நன்கொடையாளர், சமூகபற்றாளர் திரு. மகா ராஐன் மகாவேந்தன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாணவ மாணவியர் சார்பாக UF நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றது.