அன்னையரின் நினைவாக உமாபுலமை பரிசிலுக்கு ஊக்கமளித்த தனயன்!
தள்ளாத வயதிலும் தன்னிடம் உள்ள பணத்தில் கல்விக்காக கரம் கொடுத்த அன்னையின் அளப்பரிய பணியினை தொடரும் தனயன். யாழ்பாணக் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி. சரஸ்வதி கனகரத்தினம் (அம்பலவாணர் ரீச்சர்) மற்றும் அவரது சகோதரி முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி. லீலாவதி குணசிங்கம் ஆகியோரின் நினைவாக எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்துவரும் “உமாபுலமை பரிசில்” திட்டத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு(2021)மார்ச், ஏப்பிரல் மாதங்களில் சகோதரிகளான அன்னையர் இருவரும் வயது முதுமை சுகயீனம் காரணமாக இயற்கை எய்தினர். இந்த நிலையில் அந்த ஆசிரிய பெருந்தகைகள் நினைவாக கல்வி நடவடிக்கைகளிற்கு ஊக்கமளிக்க எண்ணினார் கனடாவில் வாழும் அவர்களது புதல்வர், இதன் மூலம் கிழக்கு பல்கலைகழகத்தின் கலை பீடத்தில் கல்வி பயின்று வரும் முல்லை மாவட்டத்தை சேர்ந்த செல்வி சி.தர்சிகா என்ற மாணவிக்கான உமா புலமை பரிசில் தொகையாக 10,000 ரூபா இன்றைய தினம் திங்கள்கிழமை(20.09.2021) UFஇன் பொருளாளர் திரு.ரவீந்திரன் ரவி) அவர்களால் வழங்கப்பட்டது.
மாணவியின் பட்டபடிப்பு காலம் வரை மாதந்தோறும் மேற்படி உதவியை அன்னையரின் நினைவாக உமா புலமை பரிசில் திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கு தனயன் திரு.சிம்ஹராஜ் முன்வந்துள்ளார். கற்றல் ஒன்றே கனமான பணி என்பதை உணர்ந்து ஊக்கமளித்த அன்னை ஆசிரியர்களுக்கும் அன்னை முன்னெடுத்த அளப்பரிய கல்விக்கான ஊக்குவிப்பை முன்னெடுத்து வளமான அறிவு, ஆற்றல் மிகுந்த சமூக முன்னேற்றத்தை கண்டிட கடல் கடந்து கனடாவில் இருந்து கரம் கொடுத்த தனயன் திரு. சிம்ஹராஜ்(அலெக்ஸ் இரவிவர்மா)மற்றும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எம் மாணவ, மாணவியர் சார்பாக எமது(UF)நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதுடன்,
அன்னையரின் ஆத்மா அமைதி கொள்ளட்டும் அவர்கள் ஊட்டிய கல்வி எனும் அறிவு என்றும் அவர்களை நினைவு மீட்கும்.
தாமின் புறுவது உலகின்
புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள், என்று மேற்படி குறள் விளக்கம் கூறுகின்றது.