கதிரவெளியில் முன்னைநாள் போராளிகள் குடும்பத்திற்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவி!
புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னை நாள் போராளிகள் குடும்பம் ஒன்றிற்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவியாக “மா அரைக்கும்” இயந்திரம் ஒன்று உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் இன்று வெள்ளிக்கிழமை (05.11.2021)வழங்கப்பட்டது.
காலில் விழுப்புண் அடைந்துள்ள நிலையில் போதிய வருமானமின்றி குடும்பத்துடன் மிகவும் இன்னல்படுவதாகவும், சிறியளவில் வீட்டு தோட்டத்துடன் மா இடித்து கொடுத்து வாழ்க்கையை கொண்டு செல்கின்ற நிலையில், எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி குடும்பத்துக்கான மா அரைக்கும் இயந்திரம், எமது நிறுவனத்தின்(UF) ஆலோசகர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு.ஜீவன் மாஸ்ரர் அவர்களால் வழங்கப்பட்டது.
இவ் இயந்திரத்தை வழங்கி சுயதொழில் ஊக்குவிப்பை முன்னெடுப்பை முன்னெடுப்பதற்கான நிதியுதவியை ஜேர்மன் நாட்டில் வசித்துவரும் அன்பர் திரு. கனகசிங்கம் ஸ்ரீகாந்தா அவர்கள் தனது 60வது ஜனன தினத்தினத்தில் வழங்கியிருந்தார்.
தமது வாழ்வில் இடம்பெறும் நல்நிகழ்வுகளிலும் இவ்வாறான அறபணிகளுக்கு உதவி நல்கி வறியோர் வாழ்வின் துயரத்தை போக்கிடும் புலம்பெயர் உறவுகளின் அற்பணிப்பு மிக்க செயற்பாடுகளுக்கு எமது நிறுவனம் சார்பாகவும் எம் மக்கள் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
இவ் சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவியை நல்கிய திரு. ஸ்ரீ காந்தா அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்துக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் UFதெரிவித்து கொள்கின்றது.