2021-12-11

யாழ் அச்செழுவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரண்ங்கள்!

யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு கிராமத்தில் மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள் உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையிலும் கல்வியை தொடரும் மாணவ, மாணவியர்களுக்கே இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
 
இன்று சனிக்கிழமை(11.12.2021) பிற்பகல் 3:00 மணியளவில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் நீர்வேலி அத்தியார் இந்து பாடசாலையின் உப அதிபர் திருமதி விஜயா ஜெயக்குமார், உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சிவம், சமூக செயற்பாட்டாளர் செல்வி. நிர்மாலினி, பெற்றோர் மாணவ,மாணவியர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
 
பள்ளிமுதல்-பல்கலைவரை கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் தேவைகளை கண்டறிந்து கல்வி செயற்பாடுகளிற்கு எமது நிறுவனம் முதன்மை வழங்கி ஊக்கமளித்து வருகின்றது.
 
வடக்கு கிழக்கு தாயக பகுதி எங்கும் பல்வேறு அறபணிகளை எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் செய்து வருகின்றது. எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நற்பணிகளின் பிரதான அனுசரணையாளர்களாக புலம் பெயர் எமது உறவுகளே இருந்து வருகின்றனர். அவ் உறவுகளின் கருணையினாலே வெற்றிகரமான பல மனிதாபிமான பணிகளை UF முன்னெடுத்து வருகின்றது.
 
இன்றைய இவ்மாணவர்களிற்கான கல்விக்கான கற்றல் உபகரணங்களை புலம்பெயர்ந்து வாழும் அன்பு உறவு ஒன்றே அனுசரனை வழங்கிருந்தார் அவர் வேண்டி கொண்டதின் பிரகாரம் அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. சிறந்த நல் பணியை செய்து உதவிய அந்த அன்பர்க்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் மாணவ, மாணவியர் பெற்றோர் சார்பாகவும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றது.