மாணவ, மாணவியருடனான மகாவேந்தனின் மகத்தான பணி!
உமா புலமை பரிசில் ஊக்குவிப்பு ஊடாக கல்விக்கான உதவியை நல்கி வரும் அனுசரணையாளர் திரு. மகாவேந்தன் அவர்கள் கல்வி கற்கும் மாணவர்களில் சிலரை சந்தித்து அவர்களது கல்வி நிலை, குடும்ப சூழ்நிலை, எதிர்கால திட்டங்கள் என்ன என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்து கல்வி நடவடிக்கைகளிற்கான உளவியல் ஊக்கமளித்துள்ளார்.
மாணவ, மாணவியருடனான நட்பை உறவை இறுக்கமாக்கிடும் முகமாக ஒருவருக்கொருவர் “அன்பு”என்ற எல்லையற்ற அடையாளத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக மாணவ, மாணவியருடன் ஒன்றிணைந்து கூட்டு சமையல் செய்து உண்டு மகிழ்வுற்றது மனித மற்ற மாந்தர்களுக்கு நல்லதோர் செய்தியை சொல்லி நிற்கின்றது.
வெறுமனவே பணத்தை கொடுத்துவிட்டேன் கல்வி கற்கிறார்கள் என்றில்லாமல் அவர்களது கல்வி நிலை, குடும்பநிலை, எதிர்கொள்ளும் சவால்கள், சூழ்நிலைகளை ஆராய்ந்து அவற்றை செவ்வனவே செய்வதுதான் உண்மையான சமூக கடமையாகும்.
பொறுப்புணர்வுடன் மாணவ, மாணவியரின் கல்வி நடவடிக்கைகளிற்காக எமது நிறுவனமான “உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன்” இணைந்து ஆற்றிவரும் அறபணிகளிற்கும், வழங்கி வரும் ஆதரவுக்கும் எம்மக்கள், மாணவ, மாணவியர் சார்பாகவும் திரு. மகாவேந்தனுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் UF வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.