பிறந்ததினத்தில் வாழ்வாதார, கற்றல் உதவியை நல்கி பிறப்பினை மகத்துவமாக்கிய செல்வி. இரஸ்மியா !
இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை(19.12.2021) யாழ் சுண்ணாகம் கந்தரோடை பகுதியில் மிகவும் வறிய நிலையில் வாடும் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரண தேவையுடைய மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்களை “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” ஊடாக வழங்கி பிறப்பின் மகத்துவத்தை சிறப்பாக்கினார் செல்வி இரஸ்மியா. இவ் மக்கள் நலதிட்ட நிகழ்வில் எமது நிறுவனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சிவம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு. திருமதி. இரதீஸ்வரன் சுகந்தினி தம்பதியரின் மகளே இவ்வாறான அறப்பணிகளை செய்து தனது பிறந்தநாளை அமைதியாக கொண்டாடுகின்றார், ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் இவ்வாறான உதவிகளை நல்கி தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடி வருகின்றார் செல்வி இரஸ்மியா.
புலம்பெயர்ந்தாலும் இன்னும் தாயகஉணர்வோடும், நினைவோடும் வாழ்ந்துவரும் எமது அடுத்த தலைமுறையின் இவ்வாறான அற்புத அறபணிகளையும் அதனை ஊக்கமளித்து செயற்படுத்த முன்னிற்கும் பெற்றோரும் போற்றுதற்குரியவர்கள்.
இவ்வாறாக தொடர்ந்து வடகிழக்கு தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சமூக நல மக்கள் திட்டங்களிற்கு புலம்பெயர் வாழ் உறவுகள் பிரதான உந்து சக்தியாக திகழ்கின்றனர். நற்சிந்தனையும் நல் ஒழுங்கத்தையும், அறபணிகளின் அவசியத்தையும் ஊட்டி மனிதத்தின் மகத்துவத்தை மாண்புடைய தாக்கிவரும் எம்மவர்களின் பொறுப்புமிக்க செயற்பாட்டினை பாராட்டி மகிழ்கின்றோம்.
எமது நிறுவனம் (UF) ஊடாக புலம் பெயர் உறவுகள் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கும், உதவிகளுக்கும் எம்மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதுடன், இன்று பிறந்தநாள் காணும் செல்வி. இரஸ்மியா எல்லா நலங்களும், பெயரும், கீர்த்தியும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறோம். வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க!