2021-12-23

தந்தையின் ஜனன தினத்தில் தனயனின் கருணையால் வவுனியா ஆச்சிபுரம் மாணவ மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வசித்துவரும் மாணவ, மாணவியரில் மிகவும் வசதி குறைந்த மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை(23.12.2021)வவுனியா தெற்கிலுப்பைகுளம் வீதியில் அமைந்துள்ள “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்” அலுவலகத்தில் வைத்து மேற்படி மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
 
இவ் நிகழ்வில் UF இன் செயலாளர் திருமதி. ஐஸ்மின் ஹன்றி பெரேரா, பொருளாளர் திரு.ரவீந்திரன் (ரவி) அலுவலக பொறுப்பாளர் செல்வன். சங்கீத் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 
தொடர்ச்சியாக எமது நிறுவனம் கற்றல் நடவடிக்கை உட்பட பல்வேறு நலதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது, அதில் கல்விக்கான ஊக்குவிப்பு முதன்மையானது. அந்த வகையில் இந்த மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள் கூட தந்தையின் 101 வது ஜனனதினத்தை முன்னிட்டு ஜேர்மனில் வசித்துவரும் தனயன் திரு. இராசசிங்கம் உதயகுமார் அவர்களின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது.
 
தந்தைக்கு தனயன் ஆற்று கடமையை இன்றும் நல்லதொரு தனயானாக அறபணிகள், அதுவும் கல்வி பணிக்காக செய்து அகமகிழ்வது பாராட்டுதற்குரியது.
101 வயது ஜனன தினத்தை காணும் ஐயா இராசசிங்கம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், தொடர்ச்சியாக UF ஊடாக பல்வேறு மக்கள் நலபணிகளை முன்னெடுத்துவரும் திரு. உதயகுமார் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.