2022-01-05

பாடசாலை போக்குவரத்துக்கான உதவியை கோரிநிற்கும் முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான மாணவி!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் வசித்துவரும் இவ் மாணவி பிறப்பிலேயே முள்ளந்தண்டு பாதிப்பிற்க்கு உள்ளாகிய போதும் சக்கர நாற்காலியின் உதவியுடன் ஆரம்ப கல்வியை கற்று க.பொ.தா சாதாரணதர பரீட்சையில் 5 A, I B, 2C என்ற அடிப்படையில் சித்தியடைந்துள்ளார்.
 
மேற்படிப்பை தொடர்வதற்கு வீட்டில் இருந்து 14 கிலோ மீற்றர் தூரம் சென்றே க.பொ.த உயர்தரத்தை கல்வி கற்க கூடிய பாடசாலை அமைந்துள்ளது. அந்த பாடசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்துக்கான உதவியை கோரியுள்ளார். தந்தை முதுமையடைந்துள்ள நிலையிலும் தின தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே குடும்பம் நாளாந்த வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளது. தாய் வீட்டு பெண்ணாக குடும்ப பெண்ணுக்குரிய கடமையுடன் தன்னையும் கவனித்து வருவாத தெரிவித்துள்ள இம்மாணவி, தினசரி பாடசாலை சென்று வருவதற்கான உதவியை நல்கி கற்றல் செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டியுள்ளார்.
 
தனது போக்குவரத்துக்குரிய உதவியை கொடுக்கும் நிலையில் குடும்பத்தின் வருமானம் இல்லாத நிலையில் உயர் கல்வியை கைவிடுவதை தவிர தமக்கு வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். கருணை உள்ள கொண்ட எம் புலம் பெயர் உறவுகளே உங்களால் முடியாதது எதுவுமில்லை அனர்த்தங்கள், நோய் பரவுல்கள், அழிவுகள், வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் கை கொடுத்து எம் உறவுகளுக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் நீங்கள்.
 
ஆகவே உடலின் அவையங்கள் ஒத்துளைக்க, செயற்பட மறுத்தாலும் “அறிவால்” உயர்ந்திட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் ஆராம்ப கல்வியை கற்று உயர்தரம் வரை வந்துள்ள மாணவியின் கோரிக்கையை நிறைவு செய்து இன்னுமொரு பட்டதாரியை உருவாக்கி, அங்கம் செயற்பட மறுத்தாலும் எமக்கு எமது உறவுகள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை வலிமையாக்கி மாணவியின் கற்றலுக்கு கரம் கொடுத்திடுவீர். இந்த மாணவியின் மேலதிக விபரங்கள் தகவல்கள் தேவையுடையோர் எமது நிறுவனமான “உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன்” தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றிட முடியும்.